செய்திகள்
டிஎன்பிஎல் கிரிக்கெட்

டி.என்.பி.எல். கிரிக்கெட்: கோவை-காஞ்சி அணிகள் இன்று பலப்பரீட்சை

Published On 2019-07-21 07:05 GMT   |   Update On 2019-07-21 07:05 GMT
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோவை கிங்ஸ் -காஞ்சி வீரன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

திண்டுக்கல்:

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 4-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது.

திண்டுக்கல் அடுத்த நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 10 ரன்னில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்தது.

2-வது நாளான நேற்று 2 ஆட்டங்கள் நடந்தது. காரைக்குடி காளை- திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பர் ஓவரில் காரைக்குடி காளை அணி வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சீசெம் மதுரை பாந்தர்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் டூட்டி பேட்ரியாட்சை வீழ்த்தியது.

டி.என்.பி.எல். போட்டியின் 4-வது ‘லீக்‘ ஆட்டம் இன்று இரவு 7.15 மணிக்கு நடக்கிறது. இதில் அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் - பாபா அபராஜித் தலைமையிலான வி.பி. காஞ்சி வீரன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் சம பலத்துடன் திகழ்வதால் முதல் வெற்றியை பெற போகும் அணி யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை அணியில் கேப்டன் அபினவ்முகுந்த், முகமது ஆசிக், டி.நடராஜன் போன்ற சிறந்த வீரர்களும், காஞ்சி வீரன்ஸ் அணியில் கேப்டன் பாபாஅபராஜித் விஷால்வைத்யா, கவுசிக் சீனிவாஸ் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

இரு அணிகளும் மோதிய ஆட்டங்களில் காஞ்சி வீரன்ஸ் 2 முறையும், கோவை கிங்ஸ் ஒரு முறையும் வெற்றி பெற்றன.

Tags:    

Similar News