செய்திகள்
காரைக்குடி காளை அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா

டி.என்.பி.எல். கிரிக்கெட்: காரைக்குடி அணிக்கு 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி வாரியர்ஸ்

Published On 2019-07-20 11:37 GMT   |   Update On 2019-07-20 11:37 GMT
டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளைஸ் வெற்றிபெற 172 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி அணி.
திண்டுக்கல்:

தமிழ்நாடு பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில்  காரைக்குடி காளைஸ் அணியை திருச்சி ஏதிர் கொண்டது. டாஸ் வென்ற திருச்சி வாரியர்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து, தொடக்க வீரர்களாக ஆதித்யா மற்றும் அணியின் கேப்டன் ஸ்ரீகாந்த் அனிருதா ஆகியோர் களமிறங்கினர்.
ஆதித்யா 1 ரன் எடுத்திருந்த போது விக்னேஷ் பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த சூர்ய பிரகாஷ் 12 ரன்களில் வெளியேறினார். ஆனாலும், மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஸ்ரீகாந்த் அதிகபட்சமாக 58 ரன்கள் அடித்தார். பின்னர் களமிறங்கிய ராஜ்குமார் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார்.

இதன் மூலம் காரைக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. இதனால் திருச்சி அணி வெற்றி பெற 172 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ரூபி திருச்சி வாரியர்ஸ் தரப்பில் அந்த அணியின் சரவணகுமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
Tags:    

Similar News