செய்திகள்
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி

அரசியல் தலையீடு காரணமாக ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு தடை: ஐ.சி.சி. நடவடிக்கை

Published On 2019-07-19 08:28 GMT   |   Update On 2019-07-19 08:28 GMT
கிரிக்கெட்டில் அரசியல் குறுக்கீடு இருந்ததாக கூறி, ஜிம்பாப்வே அணியை சஸ்பெண்ட் செய்துள்ளது ஐசிசி.
ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரிய நிர்வாகத்தில் அரசியல் தலையீடுகள் ஏற்பட்டது. கடந்த மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு அரசு சஸ்பெண்டு செய்து இடைக்கால கமிட்டியை நியமித்தது.

இது ஐ.சி.சி.யின் விதியை மீறிய செயலாகும். இதனால் ஜிம்பாப்வே அணியை ஐ.சி.சி. நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நீக்கம் உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் ஐ.சி.சி. நடத்தும் எந்த ஒரு போட்டிகளிலும் ஜிம்பாப்வே அணி பங்கேற்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஐ.சி.சி. வழங்கும் நிதிகளும் உடனடியாக முடக்கப்படுகிறது. இது குறித்து ஐ.சி.சி. சேர்மன் ஷசாங்க் மனோகர் கூறும்போது, ‘‘சர்வதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக ஐ.சி.சி. எப்போதுமே அவசர நிலையில் எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது. ஆனால் கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு இல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதில் ஐ.சி.சி. உறுதியாக இருக்கிறது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் நடந்துள்ள அரசியல் தலையீடுகள் ஐ.சி.சி. விதிகளை மீறிய செயலாகும். கிரிக்கெட் நிர்வாகம் மற்றும் அணி தேர்வுகளில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஐ.சி.சி. கொள்கை அடிப்படையில் ஒரு நாட்டில் கிரிக்கெட் வாரியத்தில் அரசு தலையீடு இருப்பதை விரும்பவில்லை. இதனால் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.



ஐ.சி.சி. விதிகளின்படி ஜிம்பாப்வே கிரிக்கெட்டை தொடர வேண்டும் என்று விரும்புகிறோம். அரசியல் தலையீடுகள் இருக்கும்வரை அவர்களுக்கு அனுமதி அளிக்க முடியாது’’ என்றார்.

மெதுவாக பந்து வீசும்போது கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதில் அனைத்து வீரர்களையும் சமமாக பொறுப்பேற்கும் வகையில் விதிகளில் ஐ.சி.சி. மாற்றம் செய்துள்ளது.
Tags:    

Similar News