செய்திகள்
காயத்தால் மரணம் அடைந்த ஹியூக்ஸ்

கிரிக்கெட்டில் மாற்று வீரர்களால் இனிமேல் பேட்டிங், பந்து வீச முடியும்- ஐசிசி அனுமதி

Published On 2019-07-19 08:17 GMT   |   Update On 2019-07-19 08:17 GMT
ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரருக்கு களம் இறங்க முடியாத அளவிற்கு காயம் ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக மாற்று வீரர் பேட்டிங் மற்றும் பந்து வீசலாம் என ஐசிசி தெரிவித்துள்ளது.
கிரிக்கெட்டில் இதுவரை ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்த வீரர்கள் மட்டுமே பேட்டிங் மற்றும் பவுலிங் பணியை செய்ய முடியும். ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்து ஒரு வீரருக்கு தலையில் அடிபட்டு வெளியேறினால், அவர் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறியதாக கருதப்படும். அவருக்குப் பதிலாக மாற்று வீரர் பீல்டிங் செய்யலாம். ஆனால் பந்து வீசவோ, பேட்டிங் செய்யவோ முடியாது.

இதனால் காயப்படும் வீரர் இடம் பிடித்துள்ள அணிக்கு சிக்கல் ஏற்படும். இக்கட்டான நிலையில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் அவரது பங்களிப்பு இல்லாமல் போவதால் அந்த அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.



இதனால் தலையில் அடிபட்டு பயங்கர அதிர்ச்சியுடன் பேட்டிங் செய்ய முடியாத நிலைமை ஆடும் லெவன் அணியில் இடம்பிடித்துள்ள வீரருக்கு ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக மாற்று வீரராக களம் இறங்கும் வீரரை பேட்டிங் செய்ய அனுமதிக்க வேண்டும். அதேபோல் பந்து வீசவும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

நீண்ட நாட்களாக இதுகுறித்து பரிசீலனை செய்து வந்த ஐசிசி இன்று அனுமதி அளித்துள்ளது. இது ஆகஸ்ட் 1-ந்தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது.
Tags:    

Similar News