செய்திகள்
எம்எஸ் டோனி

இந்த விஷயத்தை டோனியிடம் தேர்வுக்குழு சொல்லியே ஆக வேண்டும் -சேவாக் வருத்தம்

Published On 2019-07-19 05:43 GMT   |   Update On 2019-07-19 06:19 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான டோனியிடம், தேர்வுக்குழு இந்த விஷயத்தை நிச்சயம் கூற வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரான வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.அது என்ன என்பதை பார்ப்போம்.
புது டெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி. இந்தியாவுக்கு 2 உலகக் கோப்பையை (2007-20 ஓவர் கோப்பை, 2011 ஒருநாள் போட்டி) வென்று பெருமை சேர்த்த அவர் தற்போது ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவரில் விளையாடி வருகிறார்.

38 வயதான டோனி உலக கோப்பை போட்டியோடு ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டது. உலகக் கோப்பை போட்டியில் அவரது ஆட்டம் குறித்து கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் டோனி ஓய்வு குறித்து தன்னிடம் எதுவும் பேசவில்லை என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்து இருந்தார். இதன் மூலம் அவர் தனது ஓய்வு முடிவை தள்ளி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது.



அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை வரை விளையாட டோனி திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் இதற்கிடையே டோனி ஓய்வு பெறாவிட்டால் அவரை அணியில் சேர்க்காமல் புறக்கணிப்பது என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் வீரரான டோனி ஓய்வு குறித்து சேவாக் கூறுகையில், ‘டோனியிடம் நிலைமையை கூறுவது தேர்வுக்குழுவின் கடமை. இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஒரு பேட்ஸ்மேனாக இனி தொடர முடியாது.

இந்த விஷயத்தை தேர்வுக்குழு, டோனியிடன் நிச்சயம் எடுத்துக் கூற வேண்டும். அதன்பிறகு ஓய்வு குறித்து அவரே முடிவெடுத்துக் கொள்வார்’ என கூறினார். 
Tags:    

Similar News