செய்திகள்
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன்

எனக்கு இதுபற்றி ஒன்றும் தெரியாது -கேன் வில்லியம்சன் சொல்வது என்ன?

Published On 2019-07-17 07:02 GMT   |   Update On 2019-07-17 07:02 GMT
நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் தனக்கு ஒரு விஷயத்தைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை என கூறுகிறார். எதை குறிப்பிடுகிறார் என்பதை பார்ப்போம்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைப்பெற்றது. இதில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளுமே கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் தீவிரமாக விளையாடியது.

இந்த இறுதி ஆட்டம் ‘டை’யான நிலையில் சூப்பர் ஓவரும் ‘டை’ ஆனது. இதனால் இங்கிலாந்து அணிக்கு அதிக பவுண்டரிகள் அடித்த கணக்கில் சாம்பியன் பட்டம் வழங்கப்பட்டது. இதன் மற்றொரு கடைசி ஓவரில் ஓவர் த்ரோ எனும் விதி மூலம் இங்கிலாந்து அணிக்கு 6 ரன்கள் வழங்கப்பட்டன.

இங்கிலாந்து அணிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. பவுலட், வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தினை அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓட முயன்றார். பீல்டிங் செய்த குப்தில் பந்தை பிடித்து விக்கெட் கீப்பரிடம் வீசினார்.

ஆனால், ஸ்டெம்பை நோக்கி வந்த பந்து ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு, அங்கிருந்து பவுண்டரி எல்லைக் கோட்டினை சென்றடைந்தது. இதனால் ஓடி எடுத்த 2 ரன்களுடன் ஓவர் த்ரோ மூலமாக 4 ரன்கள் கூடுதலாக இங்கிலாந்து அணிக்கு கிடைத்தது. இதன் மூலம் கிடைத்த 4 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது.



இது குறித்து நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் கூறுகையில், ‘எனக்கு ஓவர் த்ரோ பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அதே சமயம் நடுவரின் செயல்களை நாம் நிச்சயம் நம்பித்தான் ஆக வேண்டும்.

அவர்கள் அந்த இடத்தில் விதிகளை பின்பற்றதான் இருக்கிறார்கள். அவர்களும் நம்மை போன்ற மனிதர்களே. சில சமயங்களில் தவறாகி விடுகிறது. மேலும் அந்த விதி விளையாட்டில் உள்ள ஒரு இயல்பான விதி. இதில் இவ்வளவு கவனம் கொள்வது தேவை இல்லாதது’ என கூறினார்.

ஐசிசி-யின் இந்த சூப்பர் த்ரோ விதிமுறையை அனைவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த விதிமுறையால் தொடர்ச்சியாக இரண்டு முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய நியூசிலாந்து அணிக்கு அதிர்ஷ்டம் இல்லாமல் போனது. இந்த விதிமுறையை பலரும் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News