செய்திகள்
எம்எஸ் டோனி

டோனிக்கு நெருக்கடி - வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஆடமாட்டார்

Published On 2019-07-17 06:10 GMT   |   Update On 2019-07-17 06:10 GMT
ஓய்வு முடிவை வெளியிடுமாறு நெருக்கடி உள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டோனி ஆடமாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி.

இந்தியாவுக்கு இரண்டு உலக கோப்பையை (20 ஓவர் 2007, ஒரு நாள் போட்டி 2011) பெற்று பெருமையை சேர்த்தவர்.

38 வயதான டோனி டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஒரு நாள் போட்டியிலும் 20 ஓவரிலும் விளையாடி வருகிறார்.

இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த உலக கோப்பையோடு டோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் ஓய்வு முடிவை அறிவிப்பதில் காலதாமதம் செய்து வருகிறார்.

அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பையோடு ஓய்வு பெறலாம் என்று அவர் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே ஓய்வு முடிவை வெளியிடுமாறு டோனிக்கு கிரிக்கெட் வாரியம் நெருக்கடி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

டோனி ஓய்வு முடிவு அறிவிப்பை வெளியிடாவிட்டாலும் அடுத்து வரும் தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படமாட்டாது என்று கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் வெளிப்படையாக தெரிவித்து உள்ளார். அதாவது அவர் நீக்கப்படுவார் என்று தெரிவிக்கப்படுகிறது. டோனி ஓய்வு அறிவிப்பை வெளியிட நேரடியாக கொடுக்கப்படும் அழுத்தமாகவே இது கருதப்படுகிறது.

இந்திய அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர், 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி தேர்வு நாளை மறுநாள் (19-ந்தேதி) நடக்கிறது.

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் டோனி ஆடமாட்டார் என்று கூறப்படுகிறது. இளம் வீரரான
விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்படுவார்.



டோனி 11 பேர் கொண்ட அணியில் ஆடாமல் அணிக்கு உதவி அளிக்கும் வகையில் இடம் பெறுவார் என்று கூறப்படுகிறது. அணியின் சுமூக நிலைப்பாட்டுக்கு உதவி புரியும் வகையில் அவர் செயல்படுவார். இது தொடர்பாக தேர்வு குழு அவரிடம் பேச இருக்கிறது.
Tags:    

Similar News