செய்திகள்
புஜாரா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்ஸ் மூலம் டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும்

Published On 2019-07-16 09:31 GMT   |   Update On 2019-07-16 09:31 GMT
ஐசிசி நடைமுறைப் படுத்தியுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்ஸ் மூலம் டெஸ்ட் போட்டிகளின் மீதான கவனம் அதிகரிக்கும் என புஜாரா தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்ஸ் முறையை அமல்படுத்தியுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்ததில் இருந்து நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் ஐரோப்பிய நாடுகளில் நடத்தப்படும் கால்பந்து லீக் போன்று நடைபெறும்.

ஒவ்வொரு அணியும் தங்களது நாட்டிலும், எதிரணி நாட்டிலும் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும். இறுதியில் ஒட்டுமொத்தமாக எந்த அணி அதிக புள்ளிகள் பெறுகிறதோ? அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் வழங்கப்படும்.

இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்ஸ் தொடரில் முதல் அணியாக வெஸ்ட் இண்டீஸை அதன் சொந்த மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.



இந்நிலையில்  சாம்பியன்ஷிப்ஸ் மூலம் டெஸ்ட் போட்டி மீதான கவனம் அதிகரிக்கும் என புஜாரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து புஜாரா கூறுகையில் ‘‘உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்ஸ் டெஸ்ட் போட்டிகளின் மீதான கவனத்தை அதிகரிக்கும்.

ஒவ்வொரு டெஸ்ட், டெஸ்ட் தொடரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். குறிப்பாக உள்நாட்டை காட்டிலும் வெளிநாட்டு மண்ணில் விளையாடி வெற்றி பெறுவது சிறந்தது’’ என்றார்.
Tags:    

Similar News