செய்திகள்
ஜிம்மி நீசம்

குழந்தைகளுக்கு ஜிம்மி நீசம் கொடுத்த கட்டாய அட்வைஸ் -என்ன?

Published On 2019-07-16 04:23 GMT   |   Update On 2019-07-16 04:26 GMT
நியூசிலாந்தில் குழந்தைகள் இனி இதை செய்ய வேண்டாம் என ஜிம்மி நீசம் அட்வைஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.அது என்ன என்பதை பார்ப்போம்.
உலக கோப்பையின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து-இங்கிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 241 ரன்கள் குவித்தது. அதனையடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் குவித்தது.

எனவே, வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்தன. இங்கிலாந்து அணி, அதிக பவுண்டரிகள் எடுத்திருந்ததால் வெற்றிப் பெற்றது.

இது குறித்து நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் ஜிம்மி நீசம் தனது டுவிட்டர் பக்கத்தில், 'குழந்தைகளே இனி நீங்கள் யாரும் விளையாட்டை உங்கள் துறையாக தேர்வு செய்ய வேண்டாம். பேக்கிங்கோ அல்லது வேறு துறையையோ தேர்ந்தெடுங்கள்' என பதிவிட்டுள்ளார்.


இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 17 பவுண்டரிகள் அடித்திருந்தது. ஆனால், இங்கிலாந்து அணி 26 பவுண்டரிகள் அடித்திருந்தது. பவுண்டரிகள் அதிகம் அடித்ததால் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து அணி வெற்றிப் பெற்றது.

இந்த விதியை சுட்டிக் காட்டும் விதமாகவே ஜிம்மி நீசம் தோல்வியின் விரக்தியில் பேசியுள்ளார் என பலரும் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் ஐசிசியின் இந்த விதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



Tags:    

Similar News