செய்திகள்
ஷுப்மான் கில் நவ்தீப் சைனி

ஷுப்மான் கில், சைனி அசத்தல்: 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணியை வீழ்த்தியது இந்தியா ‘ஏ’

Published On 2019-07-15 13:18 GMT   |   Update On 2019-07-15 13:18 GMT
வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிக்கெதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய ‘ஏ’ அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ - இந்தியா ‘ஏ’ அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்தியா ‘ஏ’ அணி வெற்றி பெற்ற நிலையில், உள்ளூர் நேரப்படி நேற்று 2-வது ஆட்டம் நடைபெற்றது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் ருத்துராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தனர். கெய்க்வாட் 102 பந்தில் 85 ரன்கள் சேர்த்தார். ஷுப்மான கில் 83 பந்தில் 62 ரன்கள் சேர்த்தார்.

அதன்பின் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் (2), மணிஷ் பாண்டே (27), ஹனுமா விஹாரி (23) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா ‘ஏ’ அணியால 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 255  ரன்களே அடிக்க முயன்றது.



பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி பேட்டிங்கை தொடங்கியது. 3-வது வீரராக களம் இறங்கிய ரெய்பரை (71) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 9-வது வீரராக களம் இறங்கிய ஷெப்பர்டு 34 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவரில் 190 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது.

இதனால் இந்தியா ‘ஏ’ அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் சைனி சிறப்பாக பந்து வீசி 8.5 ஓவரில் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் சாய்த்தார்.
Tags:    

Similar News