செய்திகள்
அரையிறுதி தோல்வி சோகத்தில் இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி 19-ந்தேதி அறிவிப்பு: அன்று பல்வேறு யூகங்களுக்கு பதில்

Published On 2019-07-15 12:34 GMT   |   Update On 2019-07-15 12:34 GMT
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி வருகிற 19-ந்தேதி அறிவிக்கப்படுகிறது. அன்று பல்வேறு யூகங்களுக்கு பதில் கிடைக்க இருக்கிறது.
உலகக்கோப்பையை இந்தியா 3-வது முறையாக வெல்லும் என்று எதிர்பார்த்த நிலையில் அரையிறுதியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து வெளியேறியது.

தோல்விக்கு சில வீரர்களை பலிகடா ஆக்க பிசிசிஐ தயாராகி வருகிறது. அதில் முதலில் இருப்பது எம்எஸ் டோனிதான். அதன்பின் விராட் கோலியின் கேப்டன் பொறுப்பு.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான மூன்று டி20, மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 3-ந்தேதி தொடங்குகிறது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி வருகிற 19-ந்தேதி அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் பும்ரா மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேவேளையில் எம்எஸ் டோனி இடம் பெறுவாரா? என்பதே கோடான கோடி கேள்வி.

மேலும் லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு இடம் கிடைக்குமா? என்பதும் கேள்விக்குறி. இந்த கேள்விக்கெல்லாம் 19-ந்தேதி விடை கிடைக்கும்.
Tags:    

Similar News