செய்திகள்
மார்டின் குப்தில்

டோனி ரன் அவுட்.. எங்க லக் - மார்டின் குப்தில்

Published On 2019-07-13 03:40 GMT   |   Update On 2019-07-13 03:40 GMT
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் டோனி அன் அவுட் ஆனது, தங்கள் அணியின் அதிர்ஷ்டம் என நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் கூறியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் 9ம் தேதி மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.

மழை குறுக்கிட்டதால் மறுநாள்(10ம் தேதி) ஆட்டம் ரிசர்வ் செய்யப்பட்டது. இதனையடுத்து 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி  களம் இறங்கியது. இறுதியில் இந்தியா தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் டோனி-ஜடேஜா கூட்டணி சிறந்த முறையில் இருந்தது. நியூசிலாந்து வீரர் குப்திலால் டோனி, நூலிழையில் ரன் அவுட் ஆனார். இதனால் இந்தியா வெற்றிப் பெறும் என்கிற இந்தியர்களின் கனவு தகர்ந்தது.



இது குறித்து நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் கூறுகையில், ‘டோனிக்குப் போடப்பட்ட பந்து என் கையில் வரும் என நினைக்கவில்லை. என்னை நோக்கி வருவதை கண்டு அதனை பிடிக்க தயாராக இருந்தேன்.

பந்து கைக்கு வந்தவுடன் ஸ்டெம்பை நோக்கி வேகமாக வீசினேன். எங்கள் நேரம்,  அது நேராக ஸ்டெம்பில் பட்டுவிட்டது. இதனால் டோனி ரன் அவுட் ஆனது எங்கள் அணிக்கு மிகச்சிறந்த லக்தான்’ என கூறினார்.

இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைந்ததற்கு ரசிகர்களின் வேதனை என்னவோ, அதேபோல் டோனியின் ரன் அவுட் குறித்து கடந்த 3 நாட்களாக வேதனையில்தான் உள்ளனர்.

டோனிக்கு ஆதரவாகவும், ஆறுதலாகவும் பலரும் தங்கள் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர். ஐசிசி கூட டோனியின் ரன் அவுட் தொடர்பாக டெர்மினேஷன் வீடியோவை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News