செய்திகள்
பிரேசில் அணி

கோபா அமெரிக்கா கால்பந்து: பெருவை 3-1 என வீழ்த்தி பிரேசில் சாம்பியன்

Published On 2019-07-08 09:51 GMT   |   Update On 2019-07-08 09:51 GMT
பிரேசில் நாட்டில் நடைபெற்று வந்த கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பெருவை 3-1 என வீழ்த்தி பிரேசில் சாம்பியன் பட்டம் வென்றது.
கால்பந்து விளையாடும் தென்அமெரிக்கா கண்டத்தில் உள்ள நாடுகளுக்கிடையே கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் நடைபெற்றது. இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பிரேசில் - பெரு அணிகள் மோதின.

ஆட்டம் தொடங்கிய 15-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் எவர்டன் முதல் கோலை பதிவு செய்தார். அதன்பின் முதல் பாதி நேரத்தின் கடைசி இரண்டு நிமிடங்கள் வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 44-வது நிமிடத்தில் பெரு அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்தி பவலோ குயேர்ரேரோ கோல் அடித்தார். முதல் பாதிக்கான இன்ஜூரி நேரத்தில் பிரேசில் அணியின் கேப்ரியல் ஜீஸஸ் கோல் (45+3) அடித்தார்.

இதனால் பிரேசில் முதல் பாதி நேரத்தில் 2-1 என முன்னிலைப் பெற்றது. 2-வது பாதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் கோல் அடிக்கும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் கிடைக்கவில்லை.



ஆட்டத்தின் 70-வது நிமிடத்தில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான கேப்ரியல் ஜீஸஸ் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டார். இதனால் பிரேசில் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. என்றாலும் பெரு அணி வீரர்களை கோல் அடிக்க அனுமதிக்க வில்லை. ஆட்டத்தின் கடைசி நிமிடமான 90-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பெனால்டியை பயன்படுத்தி ரிச்சார்லிசன் கோல் அடிக்க பிரேசில் 3-1 என வெற்றி பெற்றது.
Tags:    

Similar News