செய்திகள்
விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகைக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய கோலி

Published On 2019-07-05 03:21 GMT   |   Update On 2019-07-05 03:21 GMT
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை 87 வயதுடைய மூதாட்டி ஒருவர் உற்சாகப்படுத்தினார். அவருக்கு கொடுத்த வாக்கை இந்திய வீரர் விராட் கோலி காப்பாற்றியுள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 40-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காள தேச அணிகள் மோதின. இதனை காண வந்த ரசிகர்களுள்
சாருலதா படேல் எனும் 87 வயதுடைய மூதாட்டி ஒருவர் ஆவார்.

இவர் மிகுந்த உற்சாகத்துடன் போட்டியை கண்டு களித்து இந்திய அணி வீரர்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருந்தார். மைதானத்தில் இருந்த கேமராக்கள் மூதாட்டியின் பக்கமும் திரும்பியது.

சாருலதா, வயதை மறந்து இந்திய அணியின் ஒவ்வொரு சிக்சருக்கும், விக்கெட்டிற்கும் கையில் வைத்திருந்த இசைக்கருவியைக் கொண்டு உற்சாகமாக இசை அமைத்துக் கொண்டிருந்தார்.



போட்டி முடிந்தவுடன் இந்திய வீரர்களான விராட் கோலி, ரோகித் ஷர்மா ஆகியோர் ஆசி பெற்றனர். விராட் கோலிக்கு வாழ்த்துக் கூறி, சாருலதா முத்தமிட்ட காட்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.   

பின்னர் சாருலதாவிடம் பேசிய  விராட் கோலி, இந்திய அணி கலந்துக் கொள்ளும் மற்ற போட்டிகளுக்கான டிக்கெட் உங்களுக்கு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்வதாக வாக்களித்தார்.

அதன்படி அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கான டிக்கெட் கிடைத்துவிட்டதாக மூதாட்டியின் பேத்தி அஞ்சலி கூறியுள்ளார். இதனை கண்டு சாருலதா மிகுந்த உற்சாகம் அடைந்ததாகவும், விராட் கோலிக்கு நன்றி தெரிவித்ததாகவும் அஞ்சலி கூறியுள்ளார்.





Tags:    

Similar News