செய்திகள்
வெற்றியை கொண்டாடும் அமெரிக்க வீராங்கனை அலெக்ஸ் மார்கன்

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து- இங்கிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது அமெரிக்கா

Published On 2019-07-03 04:10 GMT   |   Update On 2019-07-03 04:10 GMT
பெண்களுக்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரில், அமெரிக்க அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
லயான்:

பிரான்சில் நடைபெற்று வரும் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லயானில் உள்ள பார்க் ஒலிம்பிக் லயானியாஸ் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அமெரிக்க அணி 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

அமெரிக்கா தரப்பில் 10வது நிமிடத்தில் கிறிஸ்டியன் பிரஸ், 31வது நிமிடத்தில் அலெக்ஸ் மார்கன் ஆகியோர் கோல் அடித்தனர். இங்கிலாந்து அணியில் எலன் வைட் 19வது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இன்று நடைபெற உள்ள மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து, ஸ்வீடன் அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணியுடன் இறுதிப்போட்டியில் அமெரிக்கா மோதுகிறது. சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி 7-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 49 ஆட்டங்களில் மொத்தம் 140 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக எலன் வைட், அலெக்ஸ் மார்கன் ஆகியோர் தலா 6 கோல்கள் அடித்து முதலிடத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News