செய்திகள்
வெற்றி மகிழ்ச்சியில் பிரேசில் அணியினர்

கோபா அமெரிக்கா கால்பந்து: அரையிறுதிக்கு பிரேசில் தகுதி - பெனால்டி ஷூட்டில் பராகுவேயை தோற்கடித்தது

Published On 2019-06-28 06:26 GMT   |   Update On 2019-06-28 06:26 GMT
கோபா அமெரிக்கா கால்பந்து காலிறுதி ஆட்டத்தில் பெனால்டி ஷூட்டில் கோல் அடித்து 4-3 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தி பிரேசில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
போர்டோ அலெக்ரே:

46-வது கோபா அமெரிக்க கால்பந்து போட்டி தொடர் பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. 12 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் கால்இறுதிக்கு பிரேசில், அர்ஜென்டீனா, பராகுவே, வெனிசுலா, கொலம்பியா, சிலி, உருகுவே, பெரு ஆகிய அணிகள் தகுதி பெற்றன. பொலிவியா, கத்தார், ஜப்பான், ஈக்வெடார் ஆகிய அணிகள் வெளியேற்றப்பட்டன.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த முதல் கால் இறுதி போட்டியில் பிரேசில்-பராகுவே அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் கோல் அடித்து மேற்கண்ட முயற்சிகள் நிறைவேறவில்லை. 58-வது நிமிடத்தில் பராகுவே வீரர் பல்புயென சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. கூடுதலாக வழங்கப்பட்ட நேரத்திலும் கோல் விழவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் பிரேசில் 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. பிரேசில் தரப்பில் வில்லியன், மர்குன்ஹோஸ், கோடின்ஹோ, ஜீசஸ் ஆகியோர் கோல் அடித்தார்.பிர்மினோ கோல் வாய்ப்பை தவறவிட்டார்.

பராகுவே தரப்பில் அல்மிரான், வால்டேஸ், ரோஜஸ் ஆகியோர் கோல் அடித்தனர். கோமஸ், கோன்சலேஸ் கோல் அடிக்காமல் தவறவிட்டார்.

மற்ற கால் இறுதி ஆட்டங்களில் அர்ஜென்டீனா- வெனிசுலா, கொலம்பியா-சிலி, உருகுவே-பெரு ஆகிய அணிகள் மோதுகின்றன.
Tags:    

Similar News