செய்திகள்

கோபா அமெரிக்கா கால்பந்து: வெறிச்சோடி கிடக்கும் கேலரி

Published On 2019-06-26 12:35 GMT   |   Update On 2019-06-26 12:35 GMT
பிரேசிலில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் பெரும்பாலான போட்டியின்போது கேலரிகள் வெறிச்சோடி கிடந்தது.

தென்அமெரிக்கா நாடுகளுக்கு இடையிலான கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நாட்டில் நடைபெற்று வருகிறது. போட்டிக்கான மைதானங்கள் சரியில்லை என்று ஏற்கனவே வீரர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இதை சமாளிப்பதற்குள் போட்டியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, போட்டியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற விமர்சனம் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

தொடரின் தொடக்க ஆட்டத்தில் பிரேசில் பொலிவியாவை எதிர்கொண்டது. இந்த போட்டியின்போது டிக்கெட் விற்பனை மூலம் 5.7 மில்லியன் டாலர் வருமானம் கிடைத்தது. அதன்பின் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற உருகுவே - சிலி ஆட்டத்தைக் காண 58 ஆயிரம் ரசிகர்கள் குவிந்தனர்.



ஆனால், ஜப்பான் - ஈக்வடார் இடையிலான போட்டியை பார்க்க வெறும் 2100 ரசிகர்கள் மட்டுமே வந்திருந்திருந்தனர். இதனால் 7600 ரசிகர்களை இலவசமாக போட்டியை காண அனுமதித்தது போட்டி நிர்வாகம்.

தற்போது லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நாக்அவுட் சுற்று தொடங்கும்போது இந்த பிரச்சனை சரியாகிவிடும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News