செய்திகள்

தென்ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்- கல்லிஸ் வலியுறுத்தல்

Published On 2019-06-24 15:29 GMT   |   Update On 2019-06-24 15:29 GMT
படுதோல்விக்குப்பின் அணியை மீண்டும் கட்டமைப்பது எப்படி என்பதை தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என கல்லிஸ் வலியுறுத்தியுள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்ஆப்பிரிக்கா அணி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி லீக் சுற்றோடு பரிதாபமாக வெளியேறியுள்ளது. சொந்த நாட்டில் 2003-ம் ஆண்டு நடைபெற்ற தொடரில் லீக் சுற்றோடு வெளியேறியது. அதன்பின் தற்போது வெளியேறியுள்ளது.

2015 உலகக்கோப்பை தொடரில் படுதோல்வியை சந்தித்த இங்கிலாந்து, அதன்பின் அணியை மீண்டும் கட்டமைத்து நான்கு ஆண்டுகளில் வலுவான அணியாக திகழ்கிறது. இந்த விஷயத்தில் தென்ஆப்பிரிக்கா இங்கிலாந்திடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என தென்ஆப்பிரிக்கா ஜாம்பவான் கல்லிஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கல்லிஸ் கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணியிடம் இருந்து உத்வேகத்தை தென்ஆப்பிரிக்கா அணி எடுத்துக் கொள்வது அவசியம். அடுத்த உலகக்கோப்பைக்காக அணியை திரும்ப கட்டமைக்க வேண்டும். நான்கு வருடத்திற்கு முன்பு இங்கிலாந்து தரவரிசையில் மிகவும் மோசமான இருந்தது.



அதன்பின் அணியை கட்டமைத்து மனதளவில் மாறி சிறந்த முறையில் ஒருநாள் போட்டிகளை எதிர்கொண்டனர். தற்போது அவர்கள் பயமின்றி விளையாடுகிறார்கள். அப்படி விளையாடினால் தவறுகள் ஏற்படாது. ஒட்டுமொத்த அணியையும் மாற்ற வேண்டிய தேவையில்லை. மோசமான நிலையில் இருந்து திரும்புவதற்கு என்ன செய் வேண்டுமோ? அதை செய்ய வேண்டும்’’ என்றார்.
Tags:    

Similar News