செய்திகள்

கோபா அமெரிக்க கால்பந்து - கத்தாரை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா

Published On 2019-06-24 07:23 GMT   |   Update On 2019-06-24 07:23 GMT
கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல் கணக்கில் கத்தாரை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறியது.
சாவ்பாவ்லோ:

46-வது கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி பிரேசிலில் உள்ள பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 12 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

‘பி’ பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா- கத்தார் அணிகள் மோதின. இதில் அர்ஜென்டினா 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றிபெற்றது.

ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் மார்டினஸ் முதல் கோலை அடித்தார். 82-வது நிமிடத்தில் செர்ஜியோ அகிரோ 2-வது கோலை அடித்தார்.

இந்த வெற்றி மூலம் அர்ஜென்டினா அந்த பிரிவில் 2-வது இடத்தை பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது. அந்த அணி ஒரு வெற்றி, 1 டிரா, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியா 1-0 என்ற கோல் கணக்கில் பாராகுவேயை தோற்கடித்தது. அந்த அணி ‘பி’ பிரிவில் முதல் இடத்தை பிடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

பிரேசில், வெணிசுலா அணிகள் ஏற்கனவே கால்இறுதிக்கு முன்னேறி இருந்தன. அர்ஜென்டினா அணி கால்இறுதியில் வெணிசுலாவுடன் மோதுகிறது.
Tags:    

Similar News