செய்திகள்

டி20, ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு -பிசிசிஐ

Published On 2019-06-24 03:25 GMT   |   Update On 2019-06-24 03:25 GMT
உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு பின் நடக்கவுள்ள டி20, ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் விராட் கோலி, பும்ரா ஆகியோருக்கு ஓய்வு என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கடந்த சனிக்கிழமை இந்திய அணி, ஆப்கானிஸ்தானை எதிர்க் கொண்டது.

இதில் இந்திய அணி 11 ரன் வித்தியாசத்தில்  ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியது. இந்த உலக கோப்பை தொடர் முடிந்த பின்னர் இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒரு நாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.



இந்த போட்டிகள் அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆகியோருக்கு இந்த போட்டிகளில் ஓய்வு அளிக்கப்படும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள, சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் ஒன்றாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் இருவரும் இணைவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிசிசிஐ அதிகாரி கூறுகையில், ‘சர்வதேச டெஸ்ட் போட்டிகள் ஆகஸ்ட் மாதம் 22 தேதி தொடங்க உள்ளது. இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு உலக கோப்பைக்கு பின்னர் நிச்சயம் ஓய்வு அவசியம். எனவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.
Tags:    

Similar News