செய்திகள்

2022 காமன்வெல்த் விளையாட்டு - இந்தியா விலகப்போவதாக மிரட்டல்

Published On 2019-06-22 10:39 GMT   |   Update On 2019-06-22 10:39 GMT
துப்பாக்கிசுடுதல், வில்வித்தை போட்டி இடம் பெறாததால் 2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து விலகப்போவதாக இந்தியா மிரட்டல் விடுத்துள்ளது.
புதுடெல்லி:

காமன்வெல்த் விளையாட்டு போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் உள்ள கோல்டுகோஸ் நகரில் நடந்தது.

22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி 2022-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் நடக்கிறது.

இந்த காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சுடுதல் போட்டி இடம் பெறாது என்று காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே வில்வித்தை போட்டி இடம் பெறாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

துப்பாக்கிசுடுதல், வில்வித்தை போட்டி இடம் பெறாததால் 2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து விலகப்போவதாக இந்தியா மிரட்டல் விடுத்துள்ளது.

இதை இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்தார். இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெறும் போது இது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

2018 காமன்வெல்த் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு 16 பதக்கம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News