செய்திகள்

பேட்ஸ்மேன்கள் எங்கள் டார்கெட் அல்ல -பும்ரா விளக்கம்

Published On 2019-06-22 07:42 GMT   |   Update On 2019-06-22 09:56 GMT
பயிற்சியின்போது இந்திய வீரர் பும்ராவின் பந்து வீச்சால் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து பும்ரா விளக்கமளித்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. சமீபத்தில் இந்திய அணியின் வீரர் ஷிகர் தவான், பெருவிரல் எலும்பு முறிவால் உலக கோப்பை அணியில் இருந்து விலகினார்.

இவருக்கு பதிலாக ரிஷப் பந்த் களம் இறங்கினார். தவானை தொடர்ந்து தசைப்பிடிப்பால் புவனேஷ் குமார் அடுத்த 3 போட்டிகளில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இன்று இந்தியா-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இதற்கான  பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, விஜய் சங்கருக்கு பந்து வீசினார். பேட்டிங்கில் இருந்த விஜய்க்கு கணுக்காலில் அடிப்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் துடித்தார். பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து பும்ரா கூறியதாவது:

பேட்ஸ்மேன்களை தாக்க வேண்டும் என்பது எங்கள் டார்கெட் அல்ல. ஆனால், சில சமயங்களில் இப்படி தான் நடக்கும். இது எதிர்பாராமல் நடந்த ஒன்று. மேலும் விஜய்க்கு அடிப்பட்டது துரதிர்ஷ்டவசமான ஒன்று.

சிறப்பாக விளையாட வேண்டும் என்றால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுதான் ஆக வேண்டும். இப்போது விஜய் நலமாக உள்ளார். அதேசமயம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தவான் நன்றாக விளையாடினார்.

அவருக்கு காயம் ஏற்பட்டதால் விலகினார். இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தவான் விலகல் குறித்த கவலையில் இருந்து  இந்தியா மீண்டு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News