செய்திகள்

கோபா அமெரிக்கா கால்பந்து: உருகுவே - ஜப்பான் ஆட்டம் டிரா

Published On 2019-06-21 10:53 GMT   |   Update On 2019-06-21 10:53 GMT
பிரேசிலில் நடைபெற்று வரும் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் உருகுவே - ஜப்பான் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
46-வது கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசில் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் உள்ள உருகுவே - ஜப்பான் அணிகள் மோதின. இதில் 25-வது நிமிடத்தில் ஜப்பான் வீரர் மியோஷி கோல் அடித்தார்.

அதன்பின் உருகுவே நட்சத்திர வீரர் சுவாரஸ் 32-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனிலையில் முடிந்தது. 2-வது பாதி ஆட்டத்தில் ஜப்பான் வீரர் மியோஷி (59 நிமிடம்) மீண்டும் கோல் அடித்தார்.

இதனால் உருகுவே வீரர்கள் கோல் அடிக்க முனைப்பு காட்டினர். 66-வது நிமிடத்தில் அந்த அணி வீரர் ஜோஸ் ஜிமென்ஸ் கோல் அடித்தார். இதனால் ஸ்கோர் 2-2 என சமநிலைப் பெற்றது. அதன்பின் இரு அணிகளும் ஆட்ட நேர முடியும் வரை மேற்கொண்டு கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது.



உருகுவே அணி ஈக்வெடாரை வீழ்த்தி இருந்தது. அந்த 4 புள்ளிகளுடன் தன் பிரிவில் முதலிடத்தில் உள்ளது. கடைசி லீக் ஆட்டத்தில் சிலியுடன் மோதுகிறது.
Tags:    

Similar News