செய்திகள்

கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்தார் டேவிட் வார்னர்

Published On 2019-06-21 10:33 GMT   |   Update On 2019-06-21 10:33 GMT
வங்காள தேச அணிக்கெதிராக சதம் அடித்ததன் மூலம் அதிக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்துள்ளார் டேவிட் வார்னர்.
நாட்டிங்காமில் நேற்று நடந்த ஆட்டத்தில் வங்காள தேசத்தை 48 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 381 ரன் குவித்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 147 பந்தில் 166 ரன் எடுத்தார். இதில் 14 பவுண்டரி, 5 சிக்கர்கள் அடங்கும்.

பின்னர் விளையாடிய வங்காள தேசம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 333 ரன் எடுத்தது. இந்த அணியில் முஷ்பிகுர் ரஹிம் சதம் (102 ரன்) அடித்தார்.

வங்காள தேசத்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் டேவிட் வார்னர் அடித்தது அவரது 16-வது சதமாகும். இதன் மூலம் அவர் ஆஸ்திரேலிய வீரர்களில் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை சமன் செய்தார்.

இருவரும் 3-வது இடத்தில் உள்ளனர். 29 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் முதலிடத்திலும், 2-வது இடத்தில் மார்க் வாக்கும் (18 சதம்) உள்ளனர்.

டேவிட் வார்னர் 110-வது இன்னிங்சில் 16-வது சதத்தை தொட்டார். இந்திய கேப்டன் விராட் கோலியும் தனது 16-வது சதத்தை 110-வது இன்னிங்சில்தான் அடித்தார். ஒட்டு மொத்தமாக டேவிட் வார்னர் 14-வது இடத்தில் உள்ளார்.
Tags:    

Similar News