செய்திகள்
சாதனை படைத்ததும் தனது காலணிக்கு முத்தமிட்டு மகிழும் பிரேசில் வீராங்கனை மார்டா

உலக கோப்பையில் 17 கோல்கள்- பிரேசில் வீராங்கனை மார்டா சாதனை

Published On 2019-06-20 05:28 GMT   |   Update On 2019-06-20 05:30 GMT
உலக கோப்பை கால்பந்து தொடர்களில் 17 கோல்கள் அடித்து பிரேசில் வீராங்கனை மார்னா சாதனை படைத்துள்ளார்.
பாரிஸ்:

24 அணிகள் இடையிலான 8-வது பெண்கள் உலக கோப்பை கால்பந்து போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. பிரேசில் நட்சத்திர வீராங்கனை மார்டா, ‘பெனால்டி’ வாய்ப்பை பயன்படுத்தி 74-வது நிமிடத்தில் கோல் அடித்தார். உலக கோப்பை போட்டியில் மார்டா அடித்த 17-வது கோல் இதுவாகும்.

இதன் மூலம் ஒட்டுமொத்த உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் (ஆண்கள் போட்டியையும் சேர்த்து) அதிக கோல் அடித்தவர் என்ற சரித்திர சாதனைக்கு 33 வயதான மார்டா சொந்தக்காரர் ஆனார். ஆண்கள் உலக உலக கோப்பை போட்டியில் கூட ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் 16 கோல்கள் அடித்ததே அதிகபட்சமாக இருக்கிறது. மேலும் 5 உலக கோப்பை தொடர்களில் கோல் அடித்த ஒரே நபரும் மார்டா தான்.



இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 4-1 என்ற கோல் கணக்கில் ஜமைக்காவை பந்தாடியது. ஆஸ்திரேலிய வீராங்கனை சாம் கெர் 4 கோல்கள் அடித்து பிரமிக்க வைத்தார். உலக கோப்பை போட்டியில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த முதல் ஆஸ்திரேலிய மங்கை என்ற சிறப்பையும் பெற்றார். இந்த பிரிவில் லீக் சுற்று முடிவில் இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரேசில் அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரேசில் அணிகள் முறையே முதல் 3 இடங்களை பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறின. ஒரு வெற்றியும் பெறாத ஜமைக்கா வெளியேற்றப்பட்டது.
Tags:    

Similar News