செய்திகள்

லார்ட்ஸ் மைதானத்தை தெறிக்கவிட்ட அர்ஜூன் டெண்டுல்கர்

Published On 2019-06-19 04:52 GMT   |   Update On 2019-06-19 04:52 GMT
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் லார்ட்ஸ் மைதானத்தை தெறிக்கவிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக இருக்கும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர். இவர் கடந்த ஆண்டு 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியின் வீரராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியபோது எடுத்த ஒரு விக்கெட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் எம்சிசி அணி, இங்கிலாந்தின்  சர்ரே கவுண்டி அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் அர்ஜூன் வேகப்பந்து வீசியுள்ளார். இதில் சர்ரே அணியின் பேட்ஸ்மேன் டெய்லி, க்ளீன் போல்ட் ஆகி வெளியேறியுள்ளார்.



இந்த வீடியோவை லார்ட்ஸ் கிரிக்கெட் மைதான நிர்வாகம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு பாராட்டியுள்ளது. இந்த விக்கெட்டில் ஸ்டெம்புகளை தெறிக்கவிட்டு அசத்தியுள்ளார் அர்ஜூன்.

இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள், சச்சின் ரசிகர்கள் என பலரும் இந்த பதிவினை பகிர்ந்து கமெண்ட்டுகளில் பாராட்டி வருகின்றனர்.

இந்த போட்டியில் அர்ஜூன்,  50 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News