செய்திகள்

ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிளாட்டினி கைது

Published On 2019-06-18 11:39 GMT   |   Update On 2019-06-18 11:39 GMT
ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிளாட்டினி ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரான்ஸ் கால்பந்து அணியின் தலைசிறந்த வீரராக திகழ்ந்த மைக்கேல் பிளாட்டினி (வயது 63) ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவராக கடந்த 2007-ம் ஆண்டு பொறுப்பேற்றார். 2018 மற்றும் 2022-ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை நடத்தும் நாடுகளை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு 2010-ல் பிபா-வால் நடத்தப்பட்டது.

அப்போது தனது பதவியை பயன்படுத்தி 2022-ல் கத்தார் உலகக்கோப்பை தொடரை நடத்தும் உரிமையை பெறுவற்காக மறைமுகமாக வேலை செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதையொட்டி இன்று பிரான்ஸில் ஊழல் தடுப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

2015-ம் ஆண்டு பிபா-வின் நெறிமுறைகளை தவறியதாக ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் தலைவரில் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News