செய்திகள்

ஆப்கானிஸ்தானை 125 ரன்களில் சுருட்டியது தென் ஆப்பிரிக்கா

Published On 2019-06-15 17:04 GMT   |   Update On 2019-06-15 17:44 GMT
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு 126 ரன்களை ரன்களை வெற்றி இலக்காக ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.
லண்டன்:

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கார்டிப்பில் இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஹஸ்ரதுல்லா ஸசாய் 22, நூர் அலி ஸத்ரான் 33, ரஷீத் கான் 35 ஆகியோர் மட்டுமே இரட்டை இலக்கு ரன்களை எடுத்து வெளியேறினர்.

மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். ரஹ்மத் ஷா 6, ஹஷ்மதுல்லா ஷாஹிடி 8, அஸ்கர் ஆப்கான் 0, முகமது நபி 1, இக்ரம் அலி கில் 9, குல்படின் நைப் 5, ஹமீத் ஹசன் 0, அப்தாப் ஆலம் என அடுத்தடுத்து வெளியேற ஆப்கானிஸ்தான் அணி 34.1 ஓவரில் 125 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் இம்ரான் தாகீர் 4, மோரிஸ் 3, ஆண்டில் பெஹ்லுக்வாயோ 2, ரபாடா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


Tags:    

Similar News