செய்திகள்

இந்தியா - பாகிஸ்தான் மோதும் கிரிக்கெட் டிக்கெட்டுக்கு கடும் கிராக்கி

Published On 2019-06-15 07:31 GMT   |   Update On 2019-06-15 07:31 GMT
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண டிக்கெட்டுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது. ஒரு டிக்கெட்டுக்கு ரூ.4.4 லட்சம் வரை கொடுக்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.

லண்டன்:

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர் பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை நடக்கிறது.

இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்துவிட்டன. இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி என்பதால் டிக்கெட் விற்பனை தொடங்கிய சில தினங்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுவிட்டன.

இந்த போட்டியை காண ஏராளமான ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை காண டிக்கெட்டுக்கு அதிக மவுசு ஏற்பட்டுள்ளது.

டிக்கெட் கிடைக்காதா? என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

டிக்கெட்டுக்கு ஏற்பட்ட கிராக்கியால் கள்ள மார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகின்றன.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி பாக்ஸில் ஒரு டிக்கெட்டுக்கு ரூ.4.4 லட்சம் வரை கொடுக்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள். இதற்கு அடுத்த நிலையில் டிக்கெட்டுகள் ரூ.2.2 லட்சத்துக்கு கள்ள மார்க்கெட்டில் கிடைக்கின்றன.

இதே போல சாதாரண விலையிலான டிக்கெட்டுகள் 3 மடங்குக்கு விற்பனை செய்யப்படுகிறது.

மான்ஸ்செஸ்டர் மைதானத்தில் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் போட்டி நடக்கிறது. இதற்கான சில டிக்கெட்டுகள் இன்னும் விற்பனையாகாமல் உள்ளது. ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் போட்டிக்கு மட்டும் டிக்கெட்டுக்கு கடுமையான கிராக்கி ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News