டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்தியா, சாம்பியன்ஷிப் கதாயுதத்தை 2-வது முறையாக தொடர்ந்து பெறுகிறது. #TeamIndia
கடந்த ஆண்டு இந்தியா ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து கதாயுதத்தை பெற்றது. தற்போது இந்த ஆண்டும் தொடர்ந்து முதல் இடம்பிடித்து கதாயுதத்தை தொடர்ந்து 2-வது முறையாக பெற்றுள்ளது.
இந்திய அணி கேப்டன் விராட் கோலி கதாயுதத்துடன் 10 லட்சம் டாலர் பரிசுத்தொகையையும் பெறுவார். நியூசிலாந்து அணி 2-வது இடத்தை பிடித்துள்ளது. அந்த அணிக்கு 5 லட்சம் டாலர் பரிசுத்தொகை வழங்கப்படும். 3-வது இடம் பிடித்துள்ள தென்ஆப்பிரிக்காவுக்கு 2 லட்சம் டாலரும், 4-வது இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு 1 லட்சம் டாலரும் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.