செய்திகள்

சிஆர்பிஎப் வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ராணுவ தொப்பியுடன் களம் இறங்கிய இந்திய வீரர்கள்

Published On 2019-03-08 08:50 GMT   |   Update On 2019-03-08 08:50 GMT
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய அணி வீரர்கள் இன்றைய போட்டியில் ராணுவ தொப்பியுடன் களம் இறங்கினர். #INDvAUS
ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் கடந்த மாதம் 14-ந்தேதி ராணுவ வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் சொகுசு காரை மோதச் செய்தான். அதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் தொடங்கியபோது இந்திய வீரர்கள் கையில் கருப்புப் பட்டையணிந்து அஞ்சலி செலுத்தினர்.



இன்று இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நடக்கிறது. உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த போட்டியின்போது ராணுவ தொப்பியுடன் களம் இறங்க இந்திய அணி முடிவு செய்தது. அதன்படி வீரர்கள் ராணுவ தொப்பியுடன் பீல்டிங் செய்ய வந்தனர். அத்துடன் இந்தப்போட்டிக்கான சம்பளத்தை மத்திய பாதுகாப்பு நிதிக்கு வழங்க வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News