இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 தொடரில் சிறப்பாக விளையாடிய மேக்ஸ்வெல் மற்றும் லோகேஷ் ராகுல் தரவரிசையில் அசுர முன்னேற்றம் அடைந்துள்ளனர். #ICCRankings
இதன்மூலம் ஐசிசி தரவரிசையில் 726 புள்ளிகளுடன் 6-வது இடத்தை பிடித்துள்ளார். முதல் 10 இடத்திற்குள் இருக்கும் ஒரே இந்திய பேட்ஸ்மேன் இவர்தான். 2-வது இன்னிங்சில் அரைசதம் அடித்த விராட் கோலி 19-வது இடத்தில் இருந்து 17-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
முதல் போட்டியில் 56 ரன்களும், 2-வது இன்னிங்சில் ஆட்டமிழக்காமல் 113 ரன்களும் குவித்த மேக்ஸ்வெல் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சராசரியாக ரன்கள் அடித்த டி'ஆர்கி ஷார்ட் 8-வது இடத்தை பிடித்துள்ளார்.
அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறது. தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தை பின்னுக்குத்தள்ளி ஆஸ்திரேலியா 3-வது இடத்தை பிடித்துள்ளது.