செய்திகள்

மெக்ராத்திற்குப் பிறகு டெஸ்ட் தரவரிசையில் முதல் இடம் பிடித்து ஆஸி. வீரர் பேட் கம்மின்ஸ் சாதனை

Published On 2019-02-17 12:10 GMT   |   Update On 2019-02-17 12:10 GMT
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத்திற்குப் பிறகு டெஸ்ட் பந்து வீச்சாளர் தரவரிசையில் பேட் கம்மின்ஸ் தற்போது முதலிடம் பிடித்துள்ளார். #ICCTestRankings
ஐசிசி டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி 992 புள்ளிகள் பெற்று முதல் இடம் வகிக்கிறார். நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 2-வது இடத்திலும், புஜாரா 3-வது இடத்திலும் உள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க வீரர் ரபாடாவை பின்னுக்குத்தள்ளி ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் முதல் இடத்தை பிடித்துள்ளார். 2006-ம் ஆண்டு மெக்ராத் ஐசிசி பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்திருந்தார். அதன்பின் தற்போது பேட் கம்மின்ஸ் முதல் இடம் பிடித்துள்ளார்.
Tags:    

Similar News