செய்திகள்

இலங்கை வீரர் கருணாரத்னே பவுன்சர் பந்து தாக்கி படுகாயம்

Published On 2019-02-02 09:26 GMT   |   Update On 2019-02-02 09:26 GMT
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது, இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர் கருணாரத்னே, பவுன்சர் பந்து தாக்கியதில் பலத்த காயமடைந்தார். #AUSvSL #Karunaratne
கான்பெரா:

ஆஸ்திரேலியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பெராவில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 384 ரன் குவித்தது. ஜோ பர்னஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் அபாரமாக விளையாடி சதம் அடித்தனர். ஹெட் 161 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார். ஜோ பர்ன்ஸ் 172 ரன்னும், பேட்டர்சன் 25 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 534 ரன்கள் எடுத்த நிலையில், முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

இதையடுத்து இலங்கை அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் திமுத் கருணாரத்னே, 46 ரன்கள் எடுத்த நிலையில், காயம் அடைந்தார். கும்மின்ஸ் வீசிய பவுன்சர் பந்து, அவரது தோள்பட்டை மற்றும் கழுத்தில் தாக்கியது. நிலைகுலைந்த கருணாரத்னேவுக்கு மைதானத்தில் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டிரெச்சர் மூலம் மைதானத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டார்.  #AUSvSL #Karunaratne
Tags:    

Similar News