செய்திகள்

ஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்

Published On 2018-09-12 13:04 GMT   |   Update On 2018-09-12 13:04 GMT
அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனைப் படைத்துள்ள ஆண்டர்சன் 600 விக்கெட் வீழ்த்துவார் என மெக்ராத் தெரிவித்துள்ளார். #JamesAnderson
ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் மெக்ராத். இவர் டெஸ்ட் போட்டியில் 563 விக்கெட்டுக்கள் வீழ்த்தி சர்வதேச அளவில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்திருந்தார்.

லண்டன் ஓவல் டெஸ்டின் நேற்றைய கடைசி நாளில் இந்தியாவின் கடைசி விக்கெட்டாக முகமது ஷமியை ஜேம்ஸ் ஆண்டர்சன் க்ளீன் போல்டாக்கினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 564 விக்கெட்டுக்கள் கைப்பற்றி, சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை மெக்ராத்திடம் இருந்து ஆண்டர்சன் பறித்தார்.



இந்நிலையில் தன்னுடைய சாதனையை கடந்த ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுக்கள் வீழ்த்துவார் என்று தெரிவித்துள்ளார்.

டெஸ்டில் முத்தையா முரளீதரன் 800 விக்கெட்டுக்கள் வீழ்த்தி முதல் இடத்திலும், ஷேன் வார்னே 708 விக்கெட்டுக்களுடன் 2-வது இடத்திலும், கும்ப்ளே 619 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். தற்போது ஆண்டர்சன் 4-வது இடத்தில் உள்ளார். மெக்ராத் 563 விக்கெட்டுக்களுடன் 5-வது இடத்தில் உள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் வால்ஷ் 519 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 6-வது இடத்தில் உள்ளார்.
Tags:    

Similar News