செய்திகள்

இந்தியா - இங்கிலாந்து தொடர் இந்தியாவிற்கு ‘மற்றொரு வாய்ப்பு பறிபோனது’ தொடர்

Published On 2018-09-06 10:52 GMT   |   Update On 2018-09-06 10:52 GMT
இந்தியா - இங்கிலாந்து இடையிலான் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இந்தியாவிற்கு மற்றொரு வாய்ப்பு பறிபோன தொடர் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். #ENGvIND
இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முடிந்துள்ள நான்கு டெஸ்டில் இந்தியா 1-3 என தோல்வியடைந்து தொடரை இழந்துள்ளது.

லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியடைந்தது. மற்ற மூன்று போட்டிகளிலும் இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 31 ரன்னிலும், சவுத்தாம்ப்டன் டெஸ்டில் 60 ரன்னிலும் தோல்வியடைந்து தொடரை பறிகொடுத்தது.



‘‘பல தொடர்களில் இந்தியா வெற்றியை நெருங்கி கடைசியில் கோட்டை விட்டுள்ளது. அதுபோன்றுதான் இந்த டெஸ்டும். இங்கிலாந்து - இந்தியா தொடர் இந்தியாவிற்கான மற்றொரு வாய்ப்பு பறிபோனது’’ தொடர் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News