செய்திகள்

ஒருநாள் அணி தரவரிசை- 34 வருடத்திற்குப் பிறகு மிகப்பெரிய சரிவை சந்தித்த ஆஸ்திரேலியா

Published On 2018-06-18 11:10 GMT   |   Update On 2018-06-18 11:10 GMT
ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான தரவரிசையில் எப்போதும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய சரிவை ஆஸ்திரேலியா அணி சந்தித்துள்ளது. #ICCRankings
கிரிக்கெட் என்றாலே நமக்கு சற்றென ஞாபகத்திற்கு வருவது ஆஸ்திரேலியாதான். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்தது. ஒரே காலத்தில் ஆஸ்திரேலியா அணி தோல்வியடைந்தார், அப்பாடா! ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது விட்டது என்ற ரசிகர்கள் சந்தோசம் அடைவார்கள்.

ஆனால் தற்போது ஆஸ்திரேலியா அணியால் வெற்றி பெற முடியவில்லையே! என்று அனுதாபமாக பார்க்கின்றன. ஏற்கனவே சொதப்பி வந்த ஆஸ்திரேலியா, பால் டேம்பரிங் விவகாரத்திற்குப் பிறகு வார்னர், ஸ்மித் இல்லாமல் தத்தளித்து வருகிறது. தற்போது இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா தோல்வியை சந்தித்தது.



இந்த தோல்வியால் இன்று வெளியிடப்படட ஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஆஸ்திரேலியா 34 வருடத்திற்குப் பிறகு இந்த சரிவை சந்தித்துள்ளது. இதற்கு முன் 1984-ல் 6-வது இடத்தில் இருந்தது.

இங்கிலாந்து 124 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 122 புள்ளிகளுடன் இந்தியா 2-வது இடத்திலும், 113 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், 112 புள்ளிகளுடன் நியூசிலாந்து 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும், ஆஸ்திரேலியா இதே புள்ளிகளுடன் 6-வது இடத்திலும் உள்ளது.
Tags:    

Similar News