செய்திகள்

நியூசிலாந்து டெஸ்ட் அணியில் மார்ட்டின் கப்தில்

Published On 2018-03-20 02:46 GMT   |   Update On 2018-03-20 02:46 GMT
இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியில் ராஸ் டெய்லருக்கு பதிலாக மார்ட்டின் கப்தில் சேர்க்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. #MartinGuptill #NZvENG
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை இங்கிலாந்து அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்த நிலையில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியில் அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேனான மார்ட்டின் கப்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஒருநாள் போட்டியில் காயம் அடைந்த ராஸ் டெய்லர் உடல் தகுதியை எட்ட முடியாத நிலை ஏற்பட்டால் அதனை சமாளிக்கும் நோக்கில் பாதுகாப்புக்காக மார்ட்டின் கப்தில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.



இதேபோல், இங்கிலாந்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடந்த இரவு விடுதி தகராறு சர்ச்சையில் சிக்கி விடுவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இங்கிலாந்து அணியில் இடையில் சேர்ந்தார். காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆடாத இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் உடல் தகுதியை எட்டி வருவதால், நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று தெரிகிறது.

இது குறித்து இங்கிலாந்து அணி வீரர் மொயீன் அலி கூறுகையில், ‘பென் ஸ்டோக்ஸ் அணிக்கு திரும்புவது அணியின் பலத்தையும், உத்வேகத்தையும் அதிகரிக்கும்’ என்றார். #MartinGuptill #NZvENG
Tags:    

Similar News