இந்தியா

எமர்ஜென்சியின் இருண்ட நாட்களை நாம் மறந்துவிடக்கூடாது- மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி பேச்சு

Published On 2022-06-26 07:39 GMT   |   Update On 2022-06-26 08:01 GMT
  • ஜனநாயக வழிமுறைகள் மூலம் இந்தியர்கள் எமர்ஜென்சியை அகற்றி ஜனநாயகத்தை மீட்டெடுத் தனர்.
  • கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு ரேடியோவில் உரையாற்றி வருகிறார். இன்று தனது 90-வது பதிப்பு உரையில் மோடி பேசியதாவது:-

எமர்ஜென்சி காலத்தின்போது அனைத்து உரிமைகளும் பறிக்கப்பட்டன. இந்த உரிமைகளில் அரசியல் அமைப்பின் 21-வது பிரிவின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட வாழ்வு மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் ஆகியவை அடங்கும்.

அந்த நேரத்தில் இந்தியாவின் ஜனநாயகம் நாட்டின் கோர்ட்டுகள், ஒவ்வொரு அரசியல் அமைப்புகளையும் நசுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பத்திரிகைகள் எல்லாம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தணிக்கை மிகவும் கடுமையானது. ஒப்புதல் இல்லாமல் எதையும் வெளியிட முடியாது.

பிரபல பாடகர் கிஷோர் குமார் அரசாங்கத்தை பாராட்ட மறுத்த போது அவர் தடை செய்யப்பட் டார். ரேடியோவில் அவரது பதிவு நீக்கப்பட்டது. பல முயற்சிகள், ஆயிரக்கணக்கான கைதுகள், லட்சக்கணக்கான மக்கள் மீதான அட்டூழியங்களுக்கு பிறகும் ஜனநாயகத்தின் மீது இந்திய மக்களின் நம்பிக்கையை அசைக்க முடியவில்லை.

ஜனநாயக உணர்வு இறுதியில் வெற்றிபெற்றது. ஜனநாயக வழிமுறைகள் மூலம் இந்தியர்கள் எமர்ஜென்சியை அகற்றி ஜனநாயகத்தை மீட்டெடுத்தனர்.

எமர்ஜென்சி காலத்தில் நாட்டு மக்களின் போராட்டத்தில் காட்சியாகவும், பங்கேற்பாளராகவும் இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இன்று நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும்போது எமர்ஜென்சியின் இருண்ட காலத்தை நாம் மறந்துவிடக்கூடாது. வரும் தலைமுறையினரும் மறக்க கூடாது.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வின்வெளி துறையிலும் முன்னேற்றங்களை அடைந்துள்ளோம்.

இவ்வாறு மோடி பேசினார்.

இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது 1975-ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி நாட்டில் அவசர நிலை (எமர்ஜென்சி) அறிவிக்கப்பட்டது 1977-ம் ஆண்டு மார்ச் 21-ந்தேதி அன்று அவை நீக்கப்பட்டது.

Tags:    

Similar News