இந்தியா
- பிரதமரின் தவறான முடிவால் எப்போதும் இல்லாத அளவில் அதிக வேலையின்மை விகிதம்.
- இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
இந்தியர்கள் இங்கு போராடிக் கொண்டிருக்கும்போது, பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிடுவதில் மும்முரமாக இருக்கிறார். பிரதமரின் தவறான முடிவால் எப்போதும் இல்லாத அளவில் அதிக வேலையின்மை விகிதம் அதிகரிப்பு, எல்ஐசி மதிப்பு இழப்பு, பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், டிஎச்எப்எல்ன் மிகப்பெரிய வங்கி மோசடி போன்ற பேரழிவுகளை மறைக்க முடியாது.
இளைஞர்களுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.