இந்தியா

ஓடும் ரெயிலில் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேர் கும்பல்

Update: 2022-06-27 04:27 GMT
  • ஒரு பெட்டியில் 16 வயது சிறுமியும், அவரது தந்தையும் பயணம் செய்தனர். அவர்கள் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண்கள் 6 பேர் நின்று கொண்டிருந்தனர். ரெயில் புறப்பட்டதும், அவர்கள் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
  • இதை கண்ட சிறுமியின் தந்தை, அந்த கும்பலை தட்டிகேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கும்பல், சிறுமியின் தந்தையை அடித்து உதைத்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து குருவாயூருக்கு ஒரு சிறப்பு ரெயில் சென்றது.

இந்த ரெயில் எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்த நேற்று முன்தினம் இரவு 7.50 மணிக்கு புறப்பட்டது. ரெயிலில் குறைந்த அளவே பயணிகள் இருந்தனர்.

ஒரு பெட்டியில் 16 வயது சிறுமியும், அவரது தந்தையும் பயணம் செய்தனர். அவர்கள் அருகே 50 வயது மதிக்கத்தக்க ஆண்கள் 6 பேர் நின்று கொண்டிருந்தனர். ரெயில் புறப்பட்டதும், அவர்கள் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.

இதை கண்ட சிறுமியின் தந்தை, அந்த கும்பலை தட்டிகேட்டார். இதில் ஆத்திரம் அடைந்த கும்பல், சிறுமியின் தந்தையை அடித்து உதைத்தனர்.

அப்போது சிறுமி அந்த கும்பலை நைசாக தனது செல்போனில் படம் பிடித்தார். பின்னர் அவர்கள் இதுபற்றி ரெயில்வே கார்டிடம் புகார் செய்தனர். அவர் ரெயில்வே பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

ரெயில்வே போலீசார் சம்பவம் நடந்த பெட்டிக்கு விரைந்து வந்தனர். அவர்களை கண்டதும் சிறுமியிடம் சில்மிஷம் செய்த கும்பல் ரெயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டது.

இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமியும், செல்போனில் தான் எடுத்த வீடியோவை போலீசாரிடம் அளித்தார். அதனை ஆய்வு செய்த போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் கைப்பற்றினர். அதில் சிறுமியிடம் சில்மிஷம் செய்த கும்பலை அடையாளம் கண்டு அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Tags:    

Similar News