இந்தியா

கடன் தருவதாக அழைத்து நடிகையை பலாத்காரம் செய்ய முயற்சி- தப்பி ஓடியவரை பிடிக்க தீவிரம்

Update: 2022-08-13 10:27 GMT
  • நடிகையின் உறவினர்கள் பாலு நாயக் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டை பூட்டிவிட்டு தப்பி ஓடியது தெரிவந்தது.
  • துணை நடிகை பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாலு நாயக்கை தேடி வருகின்றனர்.

திருப்பதி:

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் இந்திரா நகரை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். இவர் தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். மேலும் பல்வேறு வாய்ப்புகளை தேடி வருகிறார்.

இந்த நிலையில் துணை நடிகைக்கு திடீரென பண தேவை ஏற்பட்டது. தனது நண்பரான பாலு நாயக் என்பவருக்கு போன் செய்து அவசரமாக பணம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பாலு நாயக் தன்னுடைய வீட்டிற்கு வந்து பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்தார். இதையடுத்து இளம்பெண் அவரது வீட்டிற்கு சென்றார்.

அப்போது துணை நடிகையை பாலு நாயக் அறையில் தள்ளி கதவை உள் பக்கமாக தாழிட்டு கொண்டு பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த துணை நடிகை பாலு நாய்க்கை தள்ளிவிட்டார். அப்போது அவர் தன்னையும் தனது நண்பர்களையும் அனுசரித்து சென்றால் கூடுதலாக பணம் தருவதாக தெரிவித்தார். துணை நடிகை அவரிடம் இருந்து தப்பி வீட்டிற்கு வந்து தனது உறவினர்களிடம் இது குறித்து தெரிவித்தார்.

உறவினர்கள் பாலு நாயக் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் வீட்டை பூட்டிவிட்டு தப்பி ஓடியது தெரிவந்தது.

இது குறித்து துணை நடிகை பஞ்சாரா ஹில்ஸ் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பாலு நாயக்கை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News