இந்தியா

5 ஜி சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

Published On 2022-09-30 07:59 GMT   |   Update On 2022-09-30 07:59 GMT
  • மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) 6-வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
  • ஐ.எம்.சி. 2022 “புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்” என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

புதுடெல்லி:

சமீபத்தில் 5 ஜி அலை கற்றை ஏலத்தை மத்திய அரசு நடத்தியது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஏலம் எடுத்தது.

நாட்டில் 5 ஜி சேவை விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அதை பிரதமர் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) 6-வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஐ.எம்.சி. 2022 "புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்" என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

5 ஜி தொழில்நுட்பம் தடையற்ற சேவை, உயர் தரவு விகிதம், விரைவான செயல்பாடு ஆகியவற்றுடன் மிகவும் நம்பகமான தகவல் தொடர்புகளை வழங்கும். இது ஆற்றல் திறன், அலைக்கற்றை திறன் மற்றும் நெட்வொர்க் செயல் திறனை அதிகரிக்கும்.

Tags:    

Similar News