இந்தியா

ஜி-7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று ஜெர்மனி பயணம்

Published On 2022-06-25 06:01 GMT   |   Update On 2022-06-25 09:19 GMT
  • ஜெர்மனியில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் மோடி, 28-ந்தேதி நாடு திரும்பும் வழியில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்கிறார்.
  • அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஷேக் கலிபா பின் ஜயீத் அல் நஹ்யன் மறைவுக்கு மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

புதுடெல்லி:

ஜி-7 நாடுகளின் மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் ஜெர்மனியில் நடக்கிறது.

தெற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்க்லோஸ் எல்மா லில் நடக்கும் இம்மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஒலாப் ஸ்கோல்ஸ் அழைப்பு விடுத்தார்.

இதை ஏற்று கொண்ட மோடி, ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இன்று ஜெர்மனிக்கு புறப்பட்டு செல்கிறார்.

மாநாட்டில் சுற்றுச்சூழல், எரிசக்தி, காலநிலை, உணவு பாதுகாப்பு, சுகாதாரம் பாலின சமத்துவம் மற்றும் ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து மோடி பேசுகிறார்.

மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், கனடா பிரதமர் ஜஸ்டின் ஆகியோரை மோடி சந்தித்து பேசுவார் என்று தெரிகிறது.

ஜெர்மனியில் இரண்டு நாட்கள் தங்கியிருக்கும் மோடி, 28-ந்தேதி நாடு திரும்பும் வழியில் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்கிறார்.

அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஷேக் கலிபா பின் ஜயீத் அல் நஹ்யன் மறைவுக்கு மோடி இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

ஐக்கிய அரபு எமிரேட்சின் புதிய அதிபராகவும், அபு தாபியின் ஆட்சியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் முகமது பின் சயீத் அல் ரஹ்யானை சந்தித்து பேசுகிறார்.

Tags:    

Similar News