இந்தியா

காங்கிரஸ் எம்.பி. மீதான வழக்கை கைவிட சி.பி.ஐ. முடிவு

Update: 2022-08-15 09:12 GMT
  • பெண் தொழில் அதிபரை ஹிபி ஈடன் எம்.எல்.ஏ. விடுதிக்கு அழைத்து அங்குள்ள அறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.
  • சி.பி.ஐ. அதிகாரிகள் பெண் தொழில் அதிபரை டெல்லி அலுவலகத்திற்கு அழைத்து விரிவான விசாரணை நடத்தினர்.

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பல கோடி பணம் மோசடி செய்ததாக பெண் தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

இவர் மீதான வழக்கு நடந்த வந்த நிலையில் இவர் கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.பி.ஹிபி ஈடன் உள்பட சிலர் மீது செக்ஸ் புகார் கூறினார்.

அப்போது இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்டது.

அப்போது பெண் தொழில் அதிபரை ஹிபி ஈடன் எம்.எல்.ஏ. விடுதிக்கு அழைத்து அங்குள்ள அறையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியிருந்தார்.

இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் பெண் தொழில் அதிபரை டெல்லி அலுவலகத்திற்கு அழைத்து விரிவான விசாரணை நடத்தினர். இதில் பெண் தொழில் அதிபர் அளித்த புகார் தொடர்பாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. மேலும் வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் இந்த வழக்கை கைவிட சி.பி.ஐ.முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Tags:    

Similar News