இந்தியா

கேரளாவில் அரசு கல்லூரியில் சாதி பாகுபாட்டை கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டம்

Update: 2022-12-06 10:50 GMT
  • கல்லூரியில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக மாணவர்கள் புகார் கூறினர்.
  • மாணவர்கள் போராட்டம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அரசு ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் அரசு கல்லூரி ஒன்று உள்ளது.

இக்கல்லூரியில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக மாணவர்கள் புகார் கூறினர். மேலும் இக்கல்லூரியில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்களை கல்லூரியின் இயக்குனர் அவரது வீட்டு வேலைகளை செய்யக்கூறுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக கல்லூரி இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி இயக்குனருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே மாணவர்கள் போராட்டம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அரசு ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது.

Similar News