இந்தியா

பாலக்காடு அருகே மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு நிர்வாகி வெட்டி கொலை

Update: 2022-08-15 06:20 GMT
  • ஷாஜகான் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் பாலக்காட்டை அடுத்த கொட்டேகாட்டை சேர்ந்தவர் ஷாஜகான் (வயது 40).

ஷாஜகான், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மருதாரோடு பகுதி நிர்வாகியாக இருந்தார்.

இவர் நேற்றிரவு குன்னங்காடு பகுதியில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்கள் ஷாஜகானை வழிமறித்து சரமாரியாக தாக்கினர். மேலும் அரிவாளாலும் வெட்டினர். இதில் ஷாஜகான் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் அவர் அதே இடத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

ஷாஜகான் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே ஷாஜகான் கொலைக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரே காரணம் என்று அப்பகுதி மார்க்சிஸ் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் குற்றம் சாட்டினர். மேலும் ஷாஜகானுக்கு சமூக வலைதளங்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்தவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News