இந்தியா

திருப்பதி திருச்சானூர் கோவிலில் சென்னை பெண் பக்தர் மயங்கி விழுந்து மரணம்

Update: 2022-09-29 09:33 GMT
  • திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனத்திற்கு சென்றனர்.
  • கோவில் வளாகத்தை சுற்றி வரும்போது பாக்கியம் கிருஷ்ணசாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

திருப்பதி:

சென்னை மதனகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாக்கியம் கிருஷ்ணமூர்த்தி (வயது 65). நேற்று முன்தினம் தனது குடும்பத்தினருடன் திருப்பதிக்கு வந்த அவர் ஏழுமலையானை தரிசனம் செய்து விட்டு பின்னர் மாட வீதியில் சாமி வீதி உலாவை தரிசித்தனர்.

இதையடுத்து நேற்று மாலை திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் தரிசனத்திற்கு சென்றனர். கோவில் வளாகத்தை சுற்றி வரும்போது பாக்கியம் கிருஷ்ணசாமிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.

அவரது உறவினர்கள் அவருக்கு தண்ணீர் கொடுத்து உட்கார வைத்தனர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பாக்கியத்தை அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தேவஸ்தான அதிகாரிகள் அவர்களது சொந்த செலவில் பாக்கியத்தின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

Similar News