இந்தியா

கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் சரிவு

Update: 2022-11-29 06:39 GMT
  • கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 355 பேர் நலம் பெற்றுள்ளனர்.
  • இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 36 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 291 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று 215 ஆக குறைந்துள்ளது. நாட்டின் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 72 ஆயிரத்து 68 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 355 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 36 ஆயிரத்து 471 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,982 ஆக சரிந்துள்ளது. இதுநேற்றை விட 141 குறைவாகும். தொற்று பாதிப்பால் நேற்று டெல்லியில் ஒருவர் இறந்துள்ளார். மொத்த பலி எண்ணிக்கை 5,30,615 ஆக உயர்ந்துள்ளது.

Tags:    

Similar News