இந்தியா

மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு கடும் உயர்வு- இந்தியாவில் புதிதாக 17,073 பேருக்கு கொரோனா

Published On 2022-06-27 04:00 GMT   |   Update On 2022-06-27 05:55 GMT
  • கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்து நேற்று 15,208 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 87 ஆயிரத்து 606 ஆக உயர்ந்தது.
  • தற்போது 94,420 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 1,844 அதிகம் ஆகும்.

புதுடெல்லி:

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. கடந்த 24-ந்தேதி பாதிப்பு 17,336 ஆக இருந்தது. மறுநாள் 15,940 ஆகவும், நேற்று 11,739 ஆகவும் குறைந்த நிலையில் இன்று மீண்டும் 17 ஆயிரத்தை தாண்டி உள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6,493 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. அங்கு நேற்று பாதிப்பு 1,728 ஆக இருந்த நிலையில், இன்று பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது.

மொத்த பாதிப்பு 4 கோடியே 34 லட்சத்து 7 ஆயிரத்து 46 ஆக உயர்ந்தது.

கொரோனா மீட்பு சிகிச்சையில் இருந்து நேற்று 15,208 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 87 ஆயிரத்து 606 ஆக உயர்ந்தது.

தற்போது 94,420 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 1,844 அதிகம் ஆகும்.

கொரோனா பாதிப்பால் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 6 மரணங்கள் மற்றும் நேற்று மகாராஷ்டிராவில் 5, டெல்லியில் 4, பஞ்சாப், கோவாவில் தலா 2, உத்தர பிரதேசம், ஜம்மு காஷ்மீரில் தலா ஒருவர் என மேலும் 21 பேர் இறந்துள்ளனர்.

இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,25,020 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 197 கோடியே 11 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதில் நேற்று 2,49,646 மாதிரிகள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 3,03,604 மாதிரி கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News